திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு


திருவள்ளூர் அருகே ஏரியில் மண் அள்ளப்படுவது தொடர்பான வழக்கு - தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
x

மண் அள்ளப்படுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் உள்ள கோளூர் கிராமத்தில் சுமார் 185 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரி உள்ளது. இந்த ஏரியில் 50 நாட்கள் மண் அள்ளுவதற்கு கடந்த ஏப்ரல் மாதம் பல்வேறு நிபந்தனைகளுடன் மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்திருந்தார்.

இதன்படி 3 அடி ஆழத்திற்கு மட்டுமே மண் அள்ள வேண்டும் என்ற நிபந்தனையை மீறி ஒப்பந்ததாரர் பாரத் என்பவர் 5 அடிக்கு மேல் மண் அள்ளியதாக குற்றம் சாட்டி அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஆனந்தன், சரவணன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் வரும் செப்டம்பர் 4-ந்தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் நிபந்தனையை மீறி மண் அள்ளப்படுவது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story