டாஸ்மாக் கடை திறக்க போலி ஆவணம் தயாரித்த 2 பேர் மீது வழக்கு


டாஸ்மாக் கடை திறக்க போலி ஆவணம் தயாரித்த 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சுரண்டை அருகே டாஸ்மாக் கடை திறக்க போலி ஆவணம் தயாரித்த 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தென்காசி

சுரண்டை:

சுரண்டை அருகே அரியநாயகிபுரம் கிராம பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்து வருபவர் சண்முகவேல். இவர் தனது கையெழுத்தை யாரோ போலியாக பயன்படுத்தி டாஸ்மாக் கடை திறக்க தடையில்லா சான்று வழங்கியதாக தென்காசி கலெக்டரிடம் புகார் மனு கொடுத்து இருந்தார். இதையடுத்து கலெக்டர் ஆகாஷ் உத்தரவின் பேரில் அந்த டாஸ்மாக் கடை உடனடியாக மூடப்பட்டது.

இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், பஞ்சாயத்து தலைவரின் கையெழுத்து மற்றும் அரசாங்க முத்திரை ஆகியவற்றை போலியாக தயாரித்து தவறாக பயன்படுத்திய நபர்கள் அருணாசலபுரம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த ஐயங்கண்ணு என்பவரது மகன்கள் ஜெயகுட்டி (வயது 34), செல்வகுமார் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து சேர்ந்தமரம் போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


Next Story