பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
தேவதானப்பட்டி அருகே பஸ் கண்டக்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேனி
பெரியகுளத்தில் இருந்து மஞ்சளாருக்கு, பொம்மிநாயக்கன்பட்டி வழியாக நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. நடுப்பட்டி பஸ் நிறுத்தம் வந்தபோது அங்கு சிந்துவம்பட்டியை சேர்ந்த அனித்குமார் (வயது 27), முத்துராஜா (30) ஆகிய 2 பேர் பஸ்சில் ஏறினர். அவர்கள் பஸ்சின் படிக்கட்டில் அமர்ந்து பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அப்போது கண்டக்டர் அழகுமணி அவர்களை உள்ளே ஏறி வருமாறு கூறினார். இதில் அவர்கள் 2 பேர் மற்றும் கண்டக்டர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து அழகுமணியை தாக்கினர். இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story