விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு


விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
x

வடமதுரை அருகே விவசாயியை தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

திண்டுக்கல்

வடமதுரை கோட்டையன் தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 33). விவசாயி. இவருக்கு விவசாய தோட்டம் அதே பகுதியில் உள்ளது. இந்நிலையில் அவருக்கும், வடமதுரை பால்கேனி மேடு பகுதியை சேர்ந்த கருப்பையா, நடராஜ், நடுத்தெருவை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 10-ந்தேதி அவர்கள் 3 பேரும், சரவணக்குமாரின் தோட்டத்திற்குள் புகுந்தனர். அங்கிருந்த மின்மோட்டாரை கழற்றி கொண்டிருந்தனர். இதை பார்த்த சரவணகுமார் அவர்களை தட்டிக்கேட்டார். அதில் ஆத்திரமடைந்த 3 பேரும் சேர்ந்து அவரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த சரவணகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து சரவணகுமார் கொடுத்த புகாரின் பேரில் கருப்பையா உள்பட 3 பேர் மீது வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story