பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
பரமத்திவேலூர்:
பாண்டமங்கலத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் தேர் மற்றும் பூமிதி திருவிழா கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடந்தது. 15-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 16-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை சிங்கம், காமதேனு, அன்னம் மற்றும் காளை வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் நேற்று முன்தினம் வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று மாலை தேர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) பூமிதி விழாவும் நாளை (புதன்கிழமை) பொங்கல் வைத்தல், மா விளக்கும், நாளை மறுநாள் (வியாழக்கிழமை) கிடா வெட்டுதலும், 27-ந் தேதி மஞ்சள் நீராடலும், 28-ந் தேதி இரவு அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் மகா மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.