கார் மோதி பெண் பலி


கார் மோதி பெண் பலி
x

குரூப்-2 தேர்வு எழுதி விட்டு வெளியே வந்தபோது கார் மோதி பெண் பலியானார்.

திண்டுக்கல்


திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தாலுகா அரவங்குறிச்சியை சேர்ந்தவர் அலெக்ஸ் பாண்டியன். அவருடைய மனைவி யோகநாயகி (வயது 31). இவர், கடந்த 21-ந்தேதி நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தார். இவருக்கு, திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மஞ்சம்பட்டி புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அதன்படி யோகநாயகி அங்கு சென்று தேர்வு எழுதினார்.

தேர்வு முடிந்து வெளியே வந்த யோகநாயகி, பஸ் ஏறுவதற்காக மணப்பாறை-திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக மின்னல் வேகத்தில் வந்த கார் ஒன்று, யோகநாயகி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் யோகநாயகி படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி யோகநாயகி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். விபத்தில் பலியான யோகநாயகி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story