7 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து


7 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து
x

7 பள்ளி வாகனங்களின் தகுதி சான்று ரத்து

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணத்தில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 7 பள்ளி வாகனங்களின் தகுதி சான்றை ரத்து செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆய்வு

கும்பகோணம் அரசினர் தன்னாட்சி கலைக்கல்லூரி வளாகத்தில் தனியார் பள்ளி வாகனங்கள் தணிக்கை மற்றும் ஆய்வு நேற்று நடந்தது. இதற்கு கும்பகோணம் கோட்டாட்சியர் லதா தலைமை தாங்கினார். இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) கருப்புசாமி, மோட்டர் வாகன ஆய்வாளர் செந்தாமரை, துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், மாவட்ட கல்வி அலுவலர் சண்முகநாதன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளி வாகனங்களுக்கு மஞ்சள் வண்ணம் பூசியிருக்க வேண்டும், முதலுதவி பெட்டிகள், அவசரகால கதவு, குழந்தைகள் அமர்வதற்கு ஏற்ற இருக்கைகள், வேக கட்டுப்பாட்டு கருவி, கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளதா? வாகனத்தை இயக்கும் டிரைவர்களுக்கு டிரைவிங் லைசன்ஸ், சீருடை மற்றும் கண்பார்வை திறன் உள்ளிட்டவை சரியாக உள்ளதா? வாகனங்களில் உதவியாளர் நியமிக்கப்பட்டுள்ளனரா? மற்றும் வாகனங்களின் ஆவணங்கள் சரியாக உள்ளதா உள்ளிட்டவை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

7 வாகனங்களின் தகுதி சான்று ரத்து

கும்பகோணம் வட்டாரபோக்குவரத்து அலுவலகத்துக்குட்பட்ட கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் மற்றும் வலங்கைமான் சுற்றுவட்டாரத்தில் உள்ள 36 தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் 148 வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்டன. இதில் 141 வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடித்தது தெரியவந்தது. இதைடுத்து அவற்றை அதிகாரிகள் தொடர்ந்து இயக்க அனுமதி அளித்தனர்.

மேலும் ஆய்வுக்கு கொண்டுவரப்பட்ட 7 பள்ளி வாகனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதது தெரியவந்தது. இதையடுத்து அந்த வாகனங்களின் தகுதி சான்றை அதிகாரிகள் ரத்து செய்தனர். தகுதி நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களில் உள்ள குறைகளை சீரமைத்து மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினர்.


Related Tags :
Next Story