ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிப்போம்; சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பேச்சு


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிப்போம்; சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பேச்சு
x

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிப்போம் என்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பேசினார்.

ஈரோடு

சோலார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபிப்போம் என்று சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பேசினார்.

மாலை அணிவிப்பு

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 75-வது பிறந்த நாள் விழா மற்றும் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்தது செல்லுபடியாகும் என்று கூறப்பட்ட தீர்ப்பு ஆகியவற்றை ஒட்டி ஈரோட்டில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்தனர். இதையொட்டி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்தநிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓமலூர் எம்.எல்.ஏ. மணி, ஆத்தூர் எம்.எல்.ஏ.ஜெய்சங்கரன், கெங்கவல்லி எம்.எல்.ஏ. நல்லதம்பி, ஏற்காடு எம்.எல்.ஏ. சித்ரா வீரபாண்டி மற்றும் எம்.எல்.ஏ. ராஜமுத்து, ஈரோடு கூட்டுறவு சங்க தலைவர் கிருஷ்ணராஜ் உள்பட நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

புத்துணர்ச்சி

இதைத்தொடர்ந்து பெரியார் நகர், சூரம்பட்டி நால்ரோடு, எஸ்.கே.சி. வீதி, அண்ணா நகர், கிராமடை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக பொதுமக்களிடம் சென்று அ.தி.மு.க.வுக்கு வாக்கு சேகரித்தனர்.

முன்னதாக நிகழ்ச்சியில் சேலம் புறநகர் மாவட்டக் கழக செயலாளர் இளங்கோவன் பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வினர் தேனீக்கள் போல பணியாற்றி வாக்கு சேகரித்து வருகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நலத்திட்டங்கள் மூலம் வாக்கு சேகரித்து வருகிறோம். அப்போது பொதுமக்கள் எங்களிடம் கூறும்போது மீண்டும் தி.மு.க.விற்கு வாக்களித்து கடந்த சட்டமன்றத் தேர்தலில் செய்த தவறை தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் செய்ய மாட்டோம் என பலர் தெரிவிக்கின்றனர். இதனால் இடைத்தேர்தலில் எங்களுக்கு புத்துணர்ச்சி ஏற்பட்டுள்ளது.

விரட்டியடிப்போம்

எங்களைப் போல் தைரியமாக நலத்திட்டங்களை சொல்லி தி.மு.க.வால் ஓட்டு கேட்க முடியவில்லை. நாங்கள் வீடு வீடாக ஓட்டு சேகரிக்கும்போது பொதுமக்கள் எங்களை உற்சாகமாக வரவேற்று இரட்டை இலைக்கு வாக்களிப்பதாக தெரிவிக்கின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் பலத்தை நிரூபித்து காட்டுவோம். தி.மு.க.வின் சூழ்ச்சியை விரட்டியடிப்போம். பொதுமக்களாகிய நீங்கள் ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story