இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார்; 238 வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படுகிறது


இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார்; 238 வாக்குச்சாவடிகளுக்கு நாளை அனுப்பி வைக்கப்படுகிறது
x

இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பொருட்கள் 238 வாக்குச்சாவடிகளுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது.

ஈரோடு

இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் 81 வகையான பொருட்கள் தயார் நிலையில் உள்ளன. இந்த பொருட்கள் 238 வாக்குச்சாவடிகளுக்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) அனுப்பி வைக்கப்படுகிறது.

81 வகையான பொருட்கள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த தேர்தலில் 238 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. தேர்தலுக்கான ஏற்பாடுகளை அதிகாரிகளை செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியன மாநகராட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளன.

அந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டு, தினமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதேபோல் ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் பொருட்களை தயார் செய்யும் பணி கடந்த சில நாட்களாக நடந்தது. அதன்படி பென்சில், ரப்பர், பேனா, பசை, ஸ்டேப்ளர், பிளாஸ்டிக் டிரே, டிரம், குப்பைகளை போடுவதற்கான பிளாஸ்டிக் தொட்டி, சிறிய கயிறு, நூல், சீல் வைக்க தேவையான பொருட்கள் உள்பட மொத்தம் 81 வகையான பொருட்களை சாக்கு பையில் போட்டு தயார் செய்யப்பட்டது.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பி வைக்கும் வகையில் தனித்தனியாக சாக்கு பைகளில் பொருட்கள் போட்டு வைக்கப்பட்டன.

போலீஸ் பாதுகாப்பு

இந்தநிலையில் தேர்தலுக்கு பயன்படுத்தப்பட உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகிறது. அதனுடன் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தப்படும் பொருட்களும் அனுப்பி வைக்கப்பட உள்ளது.


Next Story