முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூதீவிர பிரசாரம்


முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூதீவிர பிரசாரம்
x

முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தீவிர பிரசாரம்

ஈரோடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, ஈரோடு மரப்பாலம் நேதாஜி நகரில் வீடு, வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். இந்த பிரசார நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஜாக்சன்துரை மணி, ஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு துணைச்செயலாளர் முஸ்தபா, மலேசியா ரமேஷ், கழுகுமலை முருகன், கூட்டுறவு பண்டகசாலை தலைவர் கருப்பசாமி, மாப்பிள்ளையூரணி வக்கீல் அரிஷ் மற்றும் பலர் உடன் சென்றனர்.


Next Story