தமிழ்நாட்டை வேறுமாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது- அமைச்சர் சு.முத்துசாமி குற்றச்சாட்டு


தமிழ்நாட்டை வேறுமாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது- அமைச்சர் சு.முத்துசாமி குற்றச்சாட்டு
x

தமிழ்நாட்டை வேறுமாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி குற்றம் சாட்டினார்.

ஈரோடு

தமிழ்நாட்டை வேறுமாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது என்று அமைச்சர் சு.முத்துசாமி குற்றம் சாட்டினார்.

அமைச்சர்கள் பங்கேற்பு

அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றுக்கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி, ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் நேற்று நடந்தது. இந்த முன்னாள் எம்.எல்.ஏ. கோவை செல்வராஜ் தலைமை தாங்கினார்.

அந்தியூர் செல்வராஜ் எம்.பி., தி.மு.க. நெசவாளர் அணி மாநில செயலாளர் சச்சிதானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.

மத்திய அரசு தலையீடு

அப்போது அமைச்சர் சு.முத்துசாமி பேசியதாவது:-

மத்திய அரசு தற்போது நாட்டில் எந்த மாதிரியான அணுகுமுறையை கையாண்டு வருகிறது என்பது மக்கள் எல்லோருக்கும் தெரியும். மாநில உரிமைகளில் மத்திய அரசு தொடர்ந்து தலையிட்டு வருகின்றது. தமிழ்நாட்டினை வேறுமாதிரியாக மாற்ற மத்திய அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்தில் சாதி, மத வேறுபாட்டின்றி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் கவர்னர் நடந்து கொண்ட விதம் அனைவருக்கும் தெரியும். அரசு தயாரித்து கொடுத்த அறிக்கையை படிக்காமல் புறக்கணித்ததோடு, அதை மாற்றி படித்தார். இதற்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்ட எதிர் நடவடிக்கை எல்லோராலும் பாராட்டப்பட்டது.

தேநீர் விருந்து

ஆனால் அதே முதல்-அமைச்சர் கவர்னரின் குடியரசு தினவிழா தேநீர் விருந்தில் கலந்து கொண்டார். இதுபற்றி முதல்-அமைச்சரிடம் கேட்ட போது, அன்று சட்டசபையில் நான் எதிர்வினையாற்றியது என்பது நமது உரிமை. கவர்னரின் தேநீர் விருந்தில் பங்கேற்றது என்பது எனது கடமை என்று கூறினார். தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசு அபகரிக்க முயற்சிப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் இருக்க வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டார்கள்.


Next Story