"சென்னை கூவம் ஆற்றில் வரும் 30 ஆம் தேதிக்குள்.." - பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவு


சென்னை கூவம் ஆற்றில் வரும் 30 ஆம் தேதிக்குள்.. - பசுமை தீர்ப்பாயம் விதித்த உத்தரவு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 19 Sep 2024 9:40 AM GMT (Updated: 19 Sep 2024 9:53 AM GMT)

தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை,

சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயல் வரை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈரடுக்கு மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கூவம் ஆற்றில் தூண்கள் அமைத்து வருகிறது. இந்த பணிக்காக கூவம் ஆற்றின் குறுக்கே பல இடங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் சென்னை கூவம் ஆற்றில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கொட்டிய கட்டட கழிவுகளை செப்டம்பர் 30ம் தேதிக்குள் அகற்றிட வேண்டும் என தேசிய தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கட்டட கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்யவும் அக்டோபர் 1-ம் தேதி ஆய்வறிக்கை தாக்கல் செய்யவும் நீர்வள ஆதாரத்துறைக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

நாளிதழில் வெளியான செய்தியின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனிடையே வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக கழிவுகள் அப்புறப்படுத்தப்படும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Next Story