கம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்


கம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம்
x

கம்பத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

தேனி

கம்பம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெருவில் பிரசித்திபெற்ற பகவதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி கம்பம்மெட்டு சாலையில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

பெரியமாடு, நடுமாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டான் சிட்டு, புள்ளிமான் சிட்டு, முயல்சிட்டு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 120-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இந்த போட்டிக்கு கம்பம்மெட்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை அருகில் தொடங்கி, கம்பம்மெட்டு அடிவாரம் வரை இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பந்தயத்தில் கலந்துகொண்ட மாட்டு வண்டிகள் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

முடிவில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் 3 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக இந்த போட்டியை கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பார்த்து ரசித்தனர்.


Related Tags :
Next Story