மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

திருமயம் அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி பந்தயம்

திருமயம் அருகே உள்ள மாவூர் கிராமத்தில் சோழபிராட்டி அம்மன் கோவில் உற்சவத்தை முன்னிட்டு இளைஞர்களால் நடத்தப்படும் 17-ம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் இன்று நடைபெற்றது. இதில் சிவகங்கை, காரைக்குடி, மதுரை, புதுக்கோட்டை, ஆத்தங்குடி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 23 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. திருமயம்-திருப்பத்தூர் சாலையில் நடைபெற்ற இந்த பந்தயத்தில், பெரிய மாடு பிரிவில் 8 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போய் வர 8 மைல் தூரம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

பரிசு

இதில் முதல் பரிசு மாவூர் ராமச்சந்திரன் மாட்டு வண்டியும், 2-வது பரிசு பூவாண்டிபட்டி நாச்சியார் மாட்டு வண்டியும், 3-வது பரிசு பாப்பான்கோட்டை விஸ்வநாதன் மாட்டு வண்டியும், 4-வது பரிசு நடுபடுகை கிஷோர் மாட்டு வண்டியும் பெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாட்டிற்கான பந்தயத்தில், முதல் பரிசு வளையன்வயல் அறிவுதேவர் மாட்டு வண்டியும், 2-வது பரிசு ஆலத்துப்பட்டி முனீஸ்வரரின் மாட்டு வண்டியும், 3-வது பரிசு விரமதி ராசு என்பவரின் மாட்டு வண்டியும், 4-வது பரிசு திருமயம் கோட்டை முனீஸ்வரர் மாட்டு வண்டியும் பெற்றது.

பின்னர் வெற்றிபெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் சாலையோரம் திரண்டு நின்று கண்டு ரசித்தனர்.


Next Story