மாட்டு வண்டி எல்கை பந்தயம்


மாட்டு வண்டி எல்கை பந்தயம்
x

அறந்தாங்கி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

மாட்டு வண்டி எல்கை பந்தயம்

அறந்தாங்கி அருகே திருவாப்பாடியை அடுத்த தட்டான்வயல் கிராமத்தில் முத்து முனீஸ்வரர் மற்றும் தில்லை மகாகாளியம்மன் கோவில் மாசிமக உற்சவத்தையொட்டி 43-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

இதில் பெரிய மாடு, நடுமாடு, பூஞ்சிட்டு மாடு, கரிச்சான் மாடு என 4 பிரிவாக போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகள் கலந்து கொண்டன.

பரிசுகள்

பெரியமாடு 5 ஜோடி பங்கேற்றது. நடுமாடு 12 ஜோடிகள் கலந்து கொண்டன. பூஞ்சிட்டு 53 ஜோடிகள் கலந்து கொண்டன. கரிச்சான்மாடு 23 ஜோடிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் கலந்து கொண்ட மாடுகள் வெற்றி இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன.

பந்தயம் நடைபெற்ற தட்டான்வயல்- திருவாப்பாடி இ.சி.ஆர். சாலை இருபுறமும் திரளான ரசிகர்கள் வந்திருந்து பந்தயத்தை கண்டுகளித்தனர். இதனிடையே வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story