நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் தர்ணா நடத்தினார்கள்.
நாகர்கோவில்:
அகில இந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர்கள் நலச்சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் 2 நாள் தர்ணா போராட்டம் நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள பி.எஸ்.என்.எல். எக்சேஞ்ச் அலுவலகம் முன்பு நேற்று தொடங்கியது.
இதில் 1-1-2017-ல் ஓய்வூதியம் மாற்றம் செய்திருக்க வேண்டியதை இன்னும் மாற்றம் செய்யாமல் இருப்பதைக் கண்டித்தும், உடனடியாக ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு ஓய்வூதியர்கள் நலச்சங்க குமரி மாவட்டத் தலைவர் ராஜன்பாபு தலைமை தாங்கினார். செயலாளர் செல்லையா கோரிக்கைகளை விளக்கி பேசினார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தர்ணா போராட்டம் பிற்பகல் 2 மணி வரை நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இன்று (புதன்கிழமை) 2-வது நாள் தர்ணா போராட்டம் நடக்கிறது. இதில் சங்க அகில இந்திய உதவித் தலைவர் முத்தையாலு கலந்து கொள்கிறார்.