மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து பணம்-நகை திருட்டு


மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து பணம்-நகை திருட்டு
x

மூதாட்டி வீட்டில் பீரோவை உடைத்து பணம்-நகை திருடப்பட்டுள்ளது.

கரூர்

திருக்காடுதுறை அருகே கரைப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாப்பாயி (வயது 79). அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவரது மகன்கள் ஸ்ரீநாத், சிவானந்தம், மகள் ஸ்ரேயாஸ்ரீ. இவர்கள் அனைவரும் பாப்பாயிக்கு பேரன், பேத்தி ஆவார்கள். பாப்பாயி கடந்த 6 மாதங்களாக பேரன் சிவானந்தம், பேத்தி ஸ்ரேயாஸ்ரீ ஆகியோருடன் இருந்து வந்தார். இந்நிலையில் ஸ்ரீநாத் அமெரிக்காவில் இருந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி பாப்பாயி வீட்டிற்கு வந்துள்ளார். அன்று மதியம் பாப்பாயி வீட்டில் அவரது பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.10 லட்சத்து 42 ஆயிரம், 10 பவுன் நகைகள் ஆகியவற்றை ஸ்ரீநாத் தனது சகோதரர் சிவானந்தம், சகோதரி ஸ்ரேயாஸ்ரீ ஆகியோரின் உதவியுடன் எடுத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு சென்று விட்டனர். இந்நிலையில் பாப்பாத்தி பீரோவை பார்த்த போது பீரோவில் இருந்த பணம், நகைகளை காணவில்லை. இதுகுறித்து பாப்பாத்தி கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவனிடம் புகார் அளித்தார். அதன்பேரில் வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story