கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு


கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
x

ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கழுவந்தோண்டி கிராமத்தின் வழியாக உயர் மின்னழுத்த மின்கம்பம் அமைக்கும் பணி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. அப்போது அவ்வழியாக கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான குழாய் செல்வதை கவனிக்காமல் ஊழியர்கள் மின் கம்பம் நட்டுள்ளனர். இதனால் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. மேலும் அதன் அருகே 200 மீட்டர் தொலைவில் ஒரு குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு அதிலும் கடந்த ஒருவார காலமாக தண்ணீர் வீணாக செல்கிறது.

மதனத்தூரில் இருந்து ராட்சத குழாய் மூலம் ஜெயங்கொண்டம் அருகே கிழ குடியிருப்பு கிராமத்தில் உள்ள பம்பிங் ஸ்டேஷன் வந்து பம்பிங் செய்யப்பட்டு ஆண்டிமடம் ஒன்றியத்தில் உள்ள ஆண்டிமடம் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் இலையூர் வாரியங்காவல் உள்ளிட்ட கிராமங்களுக்கு குடிநீர் செல்கிறது. இப்படி வினாடிக்கு 100 லிட்டருக்கு மேல் அனுப்பப்படும் தண்ணீர் இந்த குழாயின் உடைப்பினால் பல கிராம மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்தக் குடிநீர் குழாய் உடைப்பினால் பல கிராமங்களுக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்து பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story