புத்தக வெளியீட்டு விழா


புத்தக வெளியீட்டு விழா
x

பாளையங்கோட்டையில் புத்தக வெளியீட்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரியில் டாக்டர் எஸ்.சோமசுந்தரம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சென்னை அரசு சித்த மருத்துவ கல்லூரி முன்னாள் துணை முதல்வர் ஜெயபிரகாஷ் நாராயணன் தலைமை தாங்கினார். புத்தக ஆசிரியர் சோமசுந்தரம் வரவேற்றார். நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ. புத்தகத்தை வௌியிட்டார். அதனை முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் பெற்று கொண்டார்.

விழாவில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, ஜான்ஸ் கல்லூரி செயலாளர் கே.பி.கே.செல்ரராஜ், சித்த ஆராய்ச்சி முன்னாள் இயக்குனர்கள் ராமசாமி, பேராசிரியர்கள் கனகவல்லி, மீனாகுமாரி, சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திண்டுக்கல் சித்த மருத்துவ அதிகாரி சதீஷ்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியர் அப்துல் காதர் ஜெய்லானி தொகுத்து வழங்கினார்.


Next Story