பூத்துக்குலுங்கும் காபி செடிகள்
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதியான பெரும்பாறை பகுதியில் காபி செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன.
திண்டுக்கல்
கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கொங்கப்பட்டி, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, பூலத்தூர், குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, ஆடலூர், பன்றிமலை, சோலைக்காடு, பெரியூர், பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இங்கு உள்ள தோட்டங்களில் காபி, மிளகு, வாழை போன்றவற்றை பயிரிட்டு வருகின்றனர். காபி செடியில் அரேபிகா, ரோபோஸ்டா என 2 ரகங்கள் உள்ளன. பெரும்பாறை பகுதியில் தற்போது பெய்த மழைக்கு காபி செடிகளில் பூ பூத்து குலுங்குகின்றன. கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு காபி செடிகள் அதிக அளவில் பூத்திருப்பதால் கூடுதல் மகசூல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர்.
Related Tags :
Next Story