அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம்
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் ரத்த தான முகாம் நடந்தது.
உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் நாகை எண்ணங்களின் சங்கமம் மற்றும் குட் வெல் பவுண்டேஷன் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது. முகாமிற்கு நாகை எண்ணங்களின் சங்கமம் பொறுப்பாளர் ரஜினிகாந்த், குட் வெல் பவுண்டேஷன் நிறுவனர் ஜெயபிரகாஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் மணி, ஹரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாகை எண்ணங்களின் சங்கமம் பொறுப்பாளர் முத்துக்கிருஷ்ணன், குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஆலோசகர் ஜெகன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் அரசு தணிக்கை ஆய்வாளர் அன்பழகன், மீனவள பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் ரகுபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் டாக்டர் யோகன், குருதி வங்கி ஒருங்கிணைப்பாளர் கவியரசன் மற்றும் அரசு செவிலியர்கள் செய்து இருந்தனர். முடிவில் குட் வெல் பவுண்டேஷன் தலைமை ஒருங்கிணைப்பாளர் நவினா நன்றி கூறினார்.