அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்


அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
x

சோளிங்கா் ரோட்டரி சங்கம், டெம்பிள் சிட்டி சார்பில் அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்

ராணிப்பேட்டை

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ரோட்டரி சங்கம் சார்பில் சோளிங்கர் அரசு மருத்துவமனை மற்றும் இந்திய மருத்துவ சங்கம் இணைந்து ரத்ததான முகாமை அரசு மருத்துவமனையில் நடத்தியது.

முகாமிக்கு டாக்டர் இளங்கோவன் தலைமை தாங்கினார். ரத்த வங்கி மருத்துவர் நவீன், ரோட்டரி சங்க தலைவர் தாண்டவமூர்த்தி, செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் பழனி ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர். இதில் ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இதேபோல சோளிங்கர் டெம்பிள் சிட்டி சார்பில் உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு ரத்த தானம் முகாம் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆப் சோளிங்கர் டெம்பிள் சிட்டி தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு முன்னிலை வகித்தார்.

சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் இளங்கோவன், மருத்துவர் பாரி, வக்கீல் சக்கரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு ரத்ததான முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள். முகாமில் ரத்ததானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

முகாம்களில் பெறப்பட்ட ரத்தத்தை வாலாஜா அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. அப்போது மருத்துவர்கள், ரோட்டரி சங்கம், சோளிங்கர் டெம்பிள் சிட்டி உறுப்பினர்கள் மற்றும் ரத்த கொடையாளர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story