பா.ஜ.க.வின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு


பா.ஜ.க.வின் இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி: சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
x

தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடத்த அனுமதி வழங்கி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கோவை மாவட்ட பா.ஜ.க. செயலாளர் கிருஷ்ண பிரசாத் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு ஐகோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணிகள் காரணமாக பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இதையடுத்து , காவல்துறை பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், தேசிய கொடியை ஏந்தி இருசக்கர வாகன பேரணி நடத்த அனுமதி வழங்கி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தேசிய கொடியை ஏந்திச் செல்வதை தடுக்க கூடாது என்று காவல்துறை இயக்குனர் அறிவிக்க வேண்டும் . சுதந்திர இந்தியாவில், தேசிய கோடி ஏந்திச் செல்ல அனுமதி மறுப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. தேசிய கொடியை எடுத்து செல்பவர்கள் அதன் கண்ணியம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் பேரணிக்கான சாலையை தெரிவித்து பா.ஜ.க. சார்பில் அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story