நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும்: எச்.ராஜா பேட்டி


நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும்: எச்.ராஜா பேட்டி
x

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி தொடரும் என குளித்தலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கூறினார்.

கரூர்

ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்ட பா.ஜ.க. மகளிர் அணி சார்பில் குளித்தலை சுங்ககேட் பகுதியில் தமிழகத்தில் கள்ள சாராயத்தை தடுக்க தவறிய தி.மு.க. அரசை கண்டித்து கண்ட ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நிதிநிலைக்கு துண்டு விழும்

விஷ சாராய சாவுகள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள், இழப்புகள் குறித்து ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. 1971-ம் ஆண்டு ஆகஸ்டு 31-ந்தேதி மதுக்கடையை கருணாநிதி திறந்து வைத்ததின் பின்னணி இன்றைக்கு மிகப் பெரிய மரணங்களை தமிழகம் சந்தித்து கொண்டிருக்கிறது.

பொருளாதார மேதைகள் என்று சொல்லக்கூடிய சிலர் டாஸ்மாக்கினால் ரூ.40 ஆயிரம் கோடி வருமானம் வருகிறது இல்லை என்றால் தமிழக நிதிநிலைக்கு துண்டு விழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதன் தினமும் ரூ.100-க்கு குடிக்கிறான் என்றால் மாதம் ரூ.3 ஆயிரம். அந்த பணத்தை எப்படி மிச்சப்படுத்துவார். ஆகவே டாஸ்மாக்கினால் வரும் பணம் காற்றில் போக போகிறது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி

நேற்று முன்தினம் இரவு ரூ.2 ஆயிரம் விஷயம் ஏதும் சாதாரண பொது மக்களை பாதிக்காது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த திட்டம். பணத்தை கட்டு கட்டாக பதுக்கி வைத்து இருப்பவர்களை மட்டுமே பாதிக்கும். சாதாரண மக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. இதை வைத்து எந்த அரசியலும் செய்ய முடியாது. சிவகாசி பட்டாசு ஆலையில் உயிர் இழந்தவர்களுக்கு ரூ.3 லட்சம். ஆனால் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம். பல்லாயிரக்கணக்கான கோவில்கள் அழியும் நிலையில் உள்ள தருவாயில் இன்னும் கும்பாபிஷேகம் முடிவடையாத நிலையில் உள்ளது.

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என்ற நிலையில் உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அமித்ஷா, எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாமலை ஆகியோர் பேசியிருக்கிறார். இதில் எடப்பாடி பழனிச்சாமியை சேர்ந்த அ.தி.மு.க.விற்கு பா.ஜ.க.வின் முழு ஆதரவு என்பதில் எந்தவித சந்தேகமும் கிடையாது,

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story