அதிமுகவை பலவீனப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைக்கிறது - கே. பாலகிருஷ்ணன்


அதிமுகவை பலவீனப்படுத்தி கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைக்கிறது - கே. பாலகிருஷ்ணன்
x

அதிமுகவை பலவீனப்படுத்தி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

நாமக்கல்,

நாமக்கல்லில் நிருபர்களுக்கு பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.பாலகிருஷ்ணன் கூறியதாவது,

தமிழகத்தில் 5 ஆயிரம் குழுக்கள் அமைத்து 50 லட்சம் வீடுகளில் மக்களை சந்தித்து மத்திய அரசின் மோசமான கொள்கைகள் மற்றும் பா.ஜ.க.வின் மதவெறி அரசியல் குறித்து பிரசாரம் செய்ய உள்ளோம். அந்த பிரசாரமானது நாளை முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறும். அதன் நிறைவாக சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

பல பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மையமாகி வருகிறது. இனி பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு என்பது பலன் அளிக்காது. தனியார் துறையிலும் இடஒதுக்கீடு கொள்கையை அமல்படுத்த நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தமிழக அரசு அதற்கு வற்புறுத்த வேண்டும்.

அதிமுகவை பலவீனப்படுத்தி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள பாஜக நினைக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா என யாருமே பிரதமர் மோடியை எதிர்க்கும் நிலையில் இல்லை. அவர்களின் கோஷ்டி சண்டை பாஜகவுக்கு உதவுகிறது.

இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.


Next Story