பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்


பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2023 12:15 AM IST (Updated: 21 Jun 2023 12:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி, கழுகுமலையில் பா.ஜ.க. சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி, கழுகுமலையில் பா.ஜ.க.சார்பில் மத்திய அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

சாதனை விளக்க பொதுக்கூட்டம்

கழுகுமலையில் பா.ஜ.க. சார்பில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் காந்தி மைதானத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன்சென்னகேசவன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் ராஜேந்திரன், ராஜ்குமார், மாநில செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் ஜெகதீஷ் வரவேற்றார்.

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.

சிறப்பு அழைப்பாளராக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசுகையில்,

பிரதமர் நரேந்திர மோடி அரசு மக்களுக்கு வீடு கட்டுவதற்கு நிதி உள்பட எண்ணற்ற நலத்திட்டங்களை செய்துள்ளது. கொரோனா காலத்தில் விஞ்ஞானிகள் மூலம் தடுப்பூசி தயாரித்து அந்த மருந்தினை மக்களுக்கு செலுத்தி அனைத்து மக்களையும் பாதுகாத்தவர் பிரதமர் நரேந்திர மோடி அரசு தான். எனவே மீண்டும் நரேந்திர மோடி பிரதமர் ஆவது உறுதியாகி விட்டது. கழுகுமலையில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை விரைவில் அதிகாரிகள் சரி செய்ய வேண்டும், என்றார்.

கூட்டத்தில் ஒன்றிய பொது செயலாளர் சதீஷ், ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட துணை தலைவர்கள், மாவட்ட பொதுசெயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மண்டல் தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன் நன்றி கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி 1-ம் கேட் காந்தி சிலை அருகே பிரதமர் நரேந்திர மோடி அரசின் 9 ஆண்டு கால சாதனைகள் விளக்க தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணைத்தலைவர் எஸ்.பி.வாரியார், கல்வியாளர் பிரிவு மாவட்ட துணை தலைவர் சுதா குருமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் மாவட்ட பொதுச் செயலாளர் சத்தியசீலன், மாவட்டத் துணைத் தலைவர்கள் சிவராமன், தங்கம் மற்றும் கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story