பா.ஜ.க. சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜை விழாவில் கலந்துகொள்ள பொறுப்பாளர்கள் - அண்ணாமலை அறிவிப்பு
பா.ஜ.க. சார்பில் தியாகி இம்மானுவேல் சேகரன் குரு பூஜை விழாவில் கலந்துகொள்ள பொறுப்பாளர்களை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை,
தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவரும், தன்னுடைய இளம் வயதிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்தவருமான தியாகி இம்மானுவேல் சேகரனின் 65-ம் ஆண்டு குருபூஜை விழா வருகிற 11-ந்தேதி நடைபெற உள்ளது.
தமிழக பா.ஜ.க.வின் சார்பில் மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி தலைமையில் மாநில பொதுச்செயலாளர்கள் ஏ.பி.முருகானந்தம், இராம ஸ்ரீனிவாசன், மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில செயலாளர் ஏ.அஸ்வத்தாமன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் புரட்சி கவிதாசன், எஸ்.சி. அணி மாநில தலைவர் தடா பெரியசாமி, கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் கே.மாணிக்கம், பொருளாதார பிரிவு மாநில தலைவர் எம்.எஸ்.ஷா, நெல்லை மாவட்ட பார்வையாளர் நீல முரளியாதவ் ஆகியோர் மாநில அளவில் குருபூஜை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.