ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனை
அந்தியூரில் ரூ.3½ லட்சத்துக்கு வெற்றிலை விற்பனையானது.
ஈரோடு
அந்தியூர்:
அந்தியூர் சந்தையில் வெற்றிலை விற்பனை நடைபெற்றது. அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம், கோவிலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் வெற்றிலையை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள். இதில் 100 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு ராசி வெற்றிலை 50 ரூபாயில் இருந்து 70 ரூபாய்க்கும், பீடா வெற்றிலை 35 ரூபாயில் இருந்து 40 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு வெற்றிலை விற்பனையானது. ஈரோடு, பெருந்துறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் பகுதி வியாபாரிகள் வெற்றிலையை வாங்கிச்சென்றார்கள்.
Related Tags :
Next Story