பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்


பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்திய  கடைகளுக்கு அபராதம்
x

பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

மதுரை

பேரையூர்,

பேரையூர், டி.கல்லுப்பட்டி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சோதனை

மதுரை மாவட்டம் பேரையூர் பேரூராட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் ஏதேனும் பயன்படுத்தப்படுகிறதா? என பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயதாரா தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், கடைகள் ஆகிய இடங்களில் தீவிர சோதனை நடத்தினர். அப்போது கடைகளில் பயன்படுத்தப்பட்டு வந்த 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை ஆய்வுக்குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

பறிமுதல்

இதேபோல் டி.கல்லுப்பட்டி பேரூராட்சியில் பேரூராட்சி ஊழியர்கள் கொண்ட குழுவினர் கடைகள் மற்றும் ஓட்டல்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து சோதனை செய்தனர். அப்போது கடைகளில் பயன்படுத்தப்பட்ட 3 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது. பேரையூர், டி.கல்லுப்பட்டி, பேரூராட்சிகளில் உள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மஞ்சப்பை பயன்படுத்த பேரூராட்சி ஊழியர்களால் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Next Story