பவானிசாகர் அணை முன்பு பழுதடைந்த பாலத்தில் நிற்க சுற்றுலா பயணிகளுக்கு தடை


பவானிசாகர் அணை முன்பு  பழுதடைந்த பாலத்தில் நிற்க சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

பவானிசாகர் அணை முன்பு பழுதடைந்த பாலத்தில் நிற்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையில் இருந்து மேல் மதகுகள் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. நுரை பொங்க வெளியேறும் தண்ணீர் பவானி ஆற்றின் இரு கரைகளை தொட்டபடி செல்கிறது. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அணை முன்புள்ள சேதமடைந்த பாலத்தில் நின்று அணையிலிருந்து உபரி நீர் வெளியேறும் காட்சியை கண்டு ரசிக்கின்றனர். மேலும் ஆபத்தை உணராமல் குடும்பத்துடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். இதனால் பவானிசாகர் அணையின் முன்பு பவானி ஆற்றின் குறுக்கே உள்ள பழுதடைந்த பழைய பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்தது. இந்த நிலையில் பழுதடைந்த பாலத்தில் நின்று ஆபத்தான முறையில் செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த பாலத்தில் எச்சரிக்கை பேனர் வைத்துள்ளனர்.

அதில், பழைய பாலம் பழுதடைந்துள்ளதால் பாதசாரிகள் இப்பாலத்தின் அருகில் செல்லவோ பாலத்தில் நின்று செல்பி, புகைப்படம் எடுக்கவோ கூடாது. மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story