வங்கி கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதன மோசடி: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
பொதுமக்கள் தங்களது வங்கி விவரங்களையோ அல்லது ரகசிய குறியீட்டு எண்களையோ யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று காவல்துறை கூறியுள்ளது.
மதுரை,
மதுரையில் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிந்துகொண்டு நூதன மோசடியில் ஈடுபட்ட வழக்குகளில், இதுவரை 32 லட்ச ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுக்குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பொதுமக்களின் வங்கிக் கணக்கு விவரங்களை தெரிந்து கொண்டு, நூதனமான முறையில் நடந்த திருட்டு வழக்குகளில், இதுவரை 32லட்சத்து18 ஆயிரத்து 850 ரூபாய் வரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேப்போல், வங்கியிலிருந்து பேசுவதாகக் கூறி ஏமாற்றும் நபர்களிடம் விழிப்போடு இருக்க வேண்டும். பொதுமக்கள் தங்களது வங்கி விவரங்களையோ அல்லது ரகசிய குறியீட்டு எண்களையோ யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story