மெய்கண்டார் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி


மெய்கண்டார் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 25 May 2022 5:02 PM GMT (Updated: 26 May 2022 5:19 AM GMT)

திருவெண்ணெய்நல்லூர் மெய்கண்டார் கோவிலில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி கும்பாபிஷேகம் வருகிற 17 ந் தேதி நடக்கிறது

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்

திருவெண்ணெய்நல்லூரில் பிரசித்தி பெற்ற 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த உலகுக்கு சிவஞான போதத்தை அருளிய திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மெய்கண்டார் கோவில் உள்ளது. இங்கு கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது கருங்கல்லால் புதிய ராஜகோபுரம், மகா மண்டபம், பைரவர் சன்னதி, புதிய வெள்ளிப் பல்லக்கு உற்சவர் சிலை உள்ளிட்ட பல்வேறு வேலைப்பாடுகளுனுடன் கோவில் புனரமைக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து கோவில் கும்பாபிஷேகம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகாசந்நிதானத்தின் அருளாணையின் படி வருகிற 17-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் நடைபெறுகின்றது. இதை முன்னிட்டு பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெற்றது. இதில் சிவாச்சாரியார்களால் வேத ஆகம பாராயணம் திருமுறை இன்னிசை முழங்க சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் ஸ்ரீமத் திருச்சிற்றம்பலத்தம்பிரான் சுவாமிகள் தலைமையில் ஊர் பொதுமக்கள் முன்னிலையில் பந்தக்கால் நடப்பட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.


Next Story