அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை


அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை
x

அந்தியூர் கூட்டுறவு சங்கத்தில் ரூ.3¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் விற்பனை

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் வாழைத்தார் ஏலம் நடைபெற்றது. இதற்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், சென்னம்பட்டி, வெள்ளித்திருப்பூர், ஒலகடம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1,540 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் நேந்திரம் கிலோ ஒன்று ரூ.30-க்கும், கதலி ரூ.53-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ஒன்று ரூ.620-க்கும், செவ்வாழை ரூ.850-க்கும், ரஸ்தாளி ரூ.550-க்கும், மொந்தன் ரூ.310-க்கும், ரொபஸ்டா ரூ.370-க்கும், தேன்வாழை ரூ.680-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரத்து 450-க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டன. ஈரோடு, பெருந்துறை, சத்தியமங்கலம், திருப்பூர், கோவை மற்றும் மைசூரு ஆகிய பகுதிகளில் இருந்து வந்த வியாபாரிகள் வாழைத்தார்களை ஏலம் எடுத்துச் சென்றனர்.


Next Story