கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்


கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
x

கோபி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ.7¾ லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

ஈரோடு

கடத்தூர்

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாழைத்தார்கள் ஏலம் நடந்தது. இதற்கு 4 ஆயிரத்து 400 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்டன.

இதில் கதலி (கிலோ) ரூ.50-க்கும், நேந்திரன் ரூ.43-க்கும் ஏலம் போனது. பூவன் (தார்) ரூ.450-க்கும், தேன்வாழை ரூ.630-க்கும், செவ்வாழை ரூ.850-க்கும், ரஸ்தாளி ரூ.940-க்கும், பச்சை நாடன் ரூ.410-க்கும், ரொபஸ்டா ரூ.350-க்கும், மொந்தன் ரூ.430-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்து 87 ஆயிரத்துக்கு வாைழத்தார்கள் ஏலம் போனது. மேலும் தேங்காய் ஏலம் நடந்தது. இதற்கு 7 ஆயிரத்து 790 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதில் தேங்காய் ஒன்று ரூ.7 முதல் ரூ.12 வரை என மொத்தம் ரூ.72 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது.


Next Story