புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

புளியஞ்சோலையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருச்சி

உப்பிலியபுரம்:

கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை நீர்ப்பிடிப்பு பகுதியில் சேகரிக்கப்படும் தண்ணீர், சிற்றோடைகளாக பாய்ந்து, திருச்சி மாவட்டம் புளியஞ்சோலையில் உள்ள அய்யாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து செல்கிறது. காட்டாற்று வெள்ளமாக வரும் நீர், புளியஞ்சோலை நாட்டாமடுவில் இருந்து, வனத்துறையினரின் சோதனைச்சாவடி வரை உள்ள பகுதிகளை மூழ்கடித்தது. இதைத்தொடர்ந்து நாமக்கல் வனத்துறை வனவர் பிரியங்கா, வனக்காப்பாளர் மணிகண்டன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புளியஞ்சோலை பகுதியில் விடுமுறை நாட்களில் குவியும் சுற்றுலா பயணிகள் நாட்டாமடு பகுதியில் குளிப்பது வழக்கம். இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி, புளியஞ்சோலை வனப்பகுதிக்குள் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் நுழைவதற்கும், நீரோட்டங்களில் குளிப்பதற்கும் அடுத்த அறிவிப்பு வரும் வரை தடை செய்யப்பட்டுள்ளது என்று நாமக்கல் மாவட்ட வன அலுவலர் (பொறுப்பு) கிரண் தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story