பேரையூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை- போலீசார் தீவிர விசாரணை


பேரையூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை- போலீசார் தீவிர விசாரணை
x

பேரையூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

பேரையூர்

பேரையூர் அரசு ஆஸ்பத்திரி கழிவறையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை மீட்கப்பட்டது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழிவறையில் கிடந்த குழந்தை

மதுரை மாவட்டம் பேரையூர் அரசு ஆஸ்பத்திரியில், வெளிநோயாளிகளுக்கான கழிவறையில் நேற்று காலை பச்சிளம் ஆண் குழந்தை கிடந்தது. இதுகுறித்து அறிந்ததும் ஆஸ்பத்திரி பணியாளர்கள் விரைந்து சென்று குழந்தையை மீட்டனர். பிறந்து தொப்புள் கொடி அறுக்கப்பட்ட நிலையில் கிடந்த அந்த ஆண் குழந்தை 1½ கிலோ எடையுடன் இருந்தது.

இதுகுறித்து அறிந்த பேரையூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். உள்நோயாளியாக யாரும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படவில்லை என்றும், அதனால் வெளியில் இருந்து குழந்தையை யாரோ கொண்டு வந்து ஆஸ்பத்திரி கழிவறையில் போட்டு இருக்கலாம் என தெரியவந்தது.

போலீசார் தீவிர விசாரணை

ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், கேமரா சரிவர செயல்படவில்லை என்றும் தெரிய வந்தது. இதனால் அக்கம்பக்கத்தில் பொருத்தி உள்ள கேமரா காட்சிகளை வைத்து குழந்தையை கழிவறையில் போட்டுச் சென்றது யார், குழந்தையின் தாய் எங்கே? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் குழந்தையின் எடை குறைவாக இருப்பதால் இன்குபேட்டரில் வைத்து பராமரிக்க மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு குழந்தை கொண்டு வரப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story