'என் குப்பை என் பொறுப்பு' குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்


என் குப்பை என் பொறுப்பு குறித்து  விழிப்புணர்வு ஊர்வலம்
x

மயிலாடுதுறையில் ‘என் குப்பை என் பொறுப்பு' குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி சார்பில் 'என் குப்பை என் பொறுப்பு' என்கிற தலைப்பில் மாணவர்கள் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்துக்கு நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி தொடங்கி வைத்தார். தியாகி நாராயணசாமி மேல்நிலைப்பள்ளியில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பள்ளியை வந்தடைந்தது. பொதுமக்கள் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து தனிதனியாக வழங்க வேண்டும், பொது இடங்களில் குப்பைகளை கொட்ட கூடாது மீறினால் ரூ.500 முதல் 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்., குப்பைகளை தரம் பிரித்துக் கொடுப்பதன் வழிமுறைகள் ஆகிய விதிமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.இந்த ஊர்வலத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகள் ஏந்தி சென்றனர். இதில் நகராட்சித் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story