பெண் குழந்தைகளை காப்பது குறித்து போலீசாருக்கான விழிப்புணர்வு பயிற்சி


பெண் குழந்தைகளை காப்பது குறித்து   போலீசாருக்கான விழிப்புணர்வு பயிற்சி
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:45 PM GMT)

பெண் குழந்தைகளை காப்பது குறித்து போலீசாருக்கான விழிப்புணர்வு பயிற்சியளிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள போலீசாருக்கு விழிப்புணர்வு பயிற்சி கூட்டம் நேற்று மாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமை தாங்கினார். மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள் கலந்துகொண்டு, இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட அனைத்து நிலை சப்-இன்ஸ்பெக்டர்களுக்கும் பயிற்சியளிக்கப்பட்டது.

கூட்டத்தின்போது, பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகரிப்பு மற்றும் அவர்களின் பாதுகாப்புக்காக தாலுகா அளவில் செயற்குழு கூட்டம் நடத்தி, அந்தந்த தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் அனைத்து அரசுத்துறை சார்ந்த அலுவலர்களும் ஒருங்கிணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ஸ்ரீதரன், கோவிந்தராஜ், சுகாதாரத்துறை துணை இயக்குனர் மணிமேகலை, திட்ட அலுவலர் விவேகானந்தன், சட்டத்துறை வக்கீல் ஜெயஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், பெண் குழந்தைகளின் முக்கியத்துவம், அவர்களுக்கான பாதிப்புகள் குறித்த சட்ட வழிமுறைகளை விளக்கினர்.


Next Story