செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
செஸ் ஒலிம்பியாட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுக்கோட்டை
44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் வருகிற 28-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக நேற்று இரு சக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது. சித்தன்னவாசலில் தொடங்கிய இந்த ஊர்வலம் புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் உள்பட அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இதேபோல புதுக்கோட்டை நகராட்சி காந்திபூங்காவில் சிறுவர்களுக்கான செஸ் விளையாட்டு நடைபெற்றது. புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் ஆடை அலங்கார அணிவகுப்பு நடைபெற்றது.
Related Tags :
Next Story