சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்


சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம்
x

சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கரூர்

தமிழ்நாடு மாநில சமரச மையத்தின் அறிவுறுத்தல் படி ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் சமரச நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி கரூர் மாவட்ட சமரச மையம் சார்பாக குளித்தலையில் சமரச நாள் கொண்டாடப்பட்டது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட நீதிபதி சண்முகசுந்தரம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தொடங்கிய ஊர்வலம் குளித்தலை சுங்க கேட்டு வரை சென்று பின்னர் மீண்டும் நீதிமன்ற வளாகத்தை வந்தடைந்தது. மேலும் ஊர்வலம் சென்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் தங்களது வழக்குகளை தங்களுக்குள்ளாகவே பேசி இருவருக்கும் வெற்றி என்ற சமரச தீர்வை ஏற்படுத்திக் கொள்ள கரூர் மாவட்ட சமரச மையத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் நீதிபதிகள் பாக்கியம், சண்முககனி, பாலமுருகன், பிரகதீஸ்வரன், தினேஷ் குமார், வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, செயலாளர் நாகராஜன் வக்கீல்கள், நீதிமன்ற ஊழியர்கள், தனியார் தொழிற்கல்வி மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story