இணையதள குற்றம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு


இணையதள குற்றம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு
x

அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் இணையதள குற்றம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூர்

வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படிக்கும் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய கல்லூரி மாணவிகளுக்கு, இணையதள அடிமை மற்றும் இணையதள குற்றம் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மருத்துவ கல்லூரி டீன் திருமால் பாபு தலைமை தாங்கினார். குடியிருப்பு மருத்துவ அலுவலர் இன்பராஜ், உதவி குடியிருப்பு மருத்துவ அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை முதல்வர் கவுரி வரவேற்றார்.

மனநல மருத்துவ துறை உதவி பேராசிரியர் முரளி கலந்துகொண்டு இணையதளம் பயன்படுத்துவதால் மனிதர்களுக்கு ஏற்படும் மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த பிரச்சினைகளும், அதனை எவ்வாறு தடுக்கும் முறைகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்.

இதில் பேராசிரியர்கள், டாக்டர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story