சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x

சாராய ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

பொன்னமராவதி காந்தி சிலை முன்பு புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி தலைமை தாங்கினார். இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் குழந்தைசாமி கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். காந்தி சிலை முன்பு இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் பொன்னமராவதி அண்ணா சாலை, பஸ் நிலையம், நாட்டுக்கல் வீதி வழியாக சென்று பொன்னமராவதி போலீஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் சாராயம், போதை பொருட்கள் மற்றும் மதுப்பழக்கம் ஆகியவற்றால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், மது அருந்தி வாகனம் ஓட்ட வேண்டாம். மதுப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும், மதுப்பழக்கம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகையினை வருவாய்த்துறையினர், கையில் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேலும் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் விழிப்புணர்வு பாடல்கள் இடம்பெற்றது. இதில் கோட்ட கலால் அலுவலர் கண்ணா கருப்பையா, துணை வட்டாட்சியர்கள், பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story