கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் குறித்தும், பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாளையங்கோட்டையில் உள்ள சாரா டக்கர் மகளிர் கல்லூரியில் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பெண்கள் சமூக வலைதளங்களில் தங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும், வங்கி கணக்குகளில் ரகசிய எண்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும், தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி மற்றும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம். பண மோசடி தொடர்பான குற்றங்களுக்கு 1930 என்ற எண்ணை இலவசமாக தொடர்பு கொள்ளலாம் என்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.