திருவள்ளூரில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்த விழிப்புணர்வு
திருவள்ளூரில் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் தடுப்பது குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண் உத்தரவின் பேரில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு போலீசார் நேரடியாக சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து திருவள்ளூர் துணை-போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன் அறிவுறுத்தலின்படியும், நேற்று திருவள்ளூர் டவுன் இன்ஸ்பெக்டர் பத்மஸ்ரீ பபி மற்றும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் இந்தியன் வங்கி எதிரே உள்ள ஏற்றுமதி தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களிடம் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் குறித்தும், முன்பின் தெரியாத நபர்களிடம் நேரிலும் சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டாம் எனவும், ஆன்லைன் சைபர் கிரைம் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து பெண்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினார்.