திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம்


திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம்
x
தினத்தந்தி 9 Feb 2023 6:45 PM GMT (Updated: 9 Feb 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி வேலைவாய்ப்பு குறித்த கருத்தரங்கம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்தர மதிப்பீட்டு மையம், வேலைவாய்ப்பு மையம் சார்பில், 'தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கினார். வேலைவாய்ப்பு மைய ெபாறுப்பாளர் சேகர் வரவேற்று பேசினார். கல்லூரி செயலாளர் ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மனிதவளத்துறை பொது மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் சபரி கணேஷ், இளங்கோ ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

வங்கி பொதுமேலாளர் ரமேஷ் பேசுகையில், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் உள்ள பணியிடங்கள், ஊழியர்களுக்கான தேர்வு முறைகள், சம்பளம், சலுகைகள் குறித்து விளக்கி கூறினார். மனிதவளத்துறை உதவி மேலாளர் சபரி கணேஷ் பேசுகையில், மாணவர்கள் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தேர்வுக்கு தயாராகும் முறைகள் குறித்து எடுத்துரைத்தார். கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். கல்லூரி உள்தர மதிப்பீட்டு மைய இயக்குனர் ஜிம்ரீவ்ஸ் சைலண்ட்நைட் நன்றி கூறினார்.

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்கி, உறுதிமொழியை வாசிக்க, அலுவலக கண்காணிப்பாளர் பொன்துரை, கல்லூரி அலுவலர்கள் உள்ளிட்ட அனைவரும் ஏற்றனர்.

-----


Next Story