கொரடாச்சேரியில், ரூ.1 கோடியில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம்


கொரடாச்சேரியில், ரூ.1 கோடியில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம்
x

கொரடாச்சேரியில், ரூ.1 கோடியில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம்

திருவாரூர்

கொரடாச்சேரியில் ரூ.1 கோடியில் கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் பார்வையிட்டனர்.

கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம்

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவு புதிய கட்டிடத்தை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த கால்நடை நோய் புலனாய்வு பிரிவு கட்டிடம் மூலம் இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து நகர்ப்புற, கிராமப்புற பகுதிகளில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் அனைத்துவகை கால்நடைகளுக்கு எவ்வித நோய் தொற்று ஏதும் வராமலும், பரவாமலும் இருக்க அவ்வப்போது கால்நடைகளின் நோய் மாதிரி பொருட்களை சேகரித்து ஆய்வு செய்யப்படும். ஆய்வின் முடிவு படி தடுப்பூசி அல்லது சிகிச்சை முகாம்கள் நடத்தப்படும்.

கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்து

இந்த கட்டிடமானது 3 ஆயிரத்து 761 சதுர அடி பரப்பளவில் அலுவலக அறை, ஆய்வகம், இருப்பு அறை, உதவி இயக்குனர் அறை, கால்நடை மருத்துவர் அறை, கழிவறைகள் ஆகிய வசதிகளுடன் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினர். அதனை தொடர்ந்து நடந்த கால்நடை சிகிச்சையை அவர்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள் வழங்கப்பட்டன.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் ராமலிங்கம், வருவாய் கோட்டாட்சியர் கீர்த்தனா மணி, கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கொரடாச்சேரி பேரூராட்சி தலைவர் கலைசெல்வி செல்வகுமார், பேரூராட்சி துணைத்தலைவர் தளபதி, உதவி இயக்குனர்கள் ஈஸ்வரன், சபாபதி, கால்நடை நோய் புலனாய்வு பிரிவக உதவி இயக்குனர் சுவாமிநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


Next Story