எட்டயபுரத்தில் இலவச மருத்துவ முகாம்
எட்டயபுரத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது.
எட்டயபுரம்:
தென்னகத்து செங்குந்தர் பேரமைப்பு, தமிழ் செம்படை கழகம் ஆகியவை இணைந்து கொடிகாத்த குமரன் 120-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாமை எட்டயபுரம் காளியம்மன் கோவில் அருகே உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடத்தின. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழ் செம்படை கழக நிறுவன தலைவர் முத்துவேல் ராஜா தலைமை தாங்கினார். தென்னகத்து செங்குந்தர் பேரமைப்பு நிறுவனத் தலைவர் சஞ்சய் காந்தி முன்னிலை வகித்தார் இலவச மருத்துவ முகாமை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ முகாமில் கண் பரிசோதனை, பொது மருத்துவம், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை, இருதய பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை, மூட்டு தேய்மான பரிசோதனை, பல் சம்பந்தமான நோய்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது முகாமில் 300-க்கும் மேற்பட்டவர்கள்கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் எட்டயபுரம் நகர அ.தி.மு.க செயலாளர் ராஜகுமார், அவைத்தலைவர் கணபதி, புதூர் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் தனவதி, எட்டயபுரம் பேரூராட்சி மன்ற கவுன்சிலர் அய்யம்மாள் கருப்பசாமி, இலக்கிய அணி செயலாளர் வேலுச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும், டாக்டர் அப்துல் கலாம் 92-வது பிறந்த நாளை முன்னிட்டு அக்னி சிறகுகள் மக்கள் இயக்கம் சார்பில் ரத்ததான முகாம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் நடந்தது.
ஜீவ அனுக்கிரகா இயக்கத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன் முன்னிலையில் ரத்ததான முகாமை கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
முன்னதாக டாக்டர் அப்துல் கலாமின் உருவப்படத்திற்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. மோகன், நகர மன்ற உறுப்பினர்கள் கவியரசன் செண்பகமூர்த்தி, நகர அ.தி.மு.க. செயலாளர் விஜய பாண்டியன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராமர், யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி, மகளிரணி கோமதி அய்யலுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.