வளர்ச்சி பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு
திருப்பத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் வளர்ச்சி பணிகள் குறித்து உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 36 ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெ.மணவாளன் தலைமை வகித்தார். மேலாளர் கே.எம்.நேரு வரவேற்றார். ஊராட்சிகள் உதவி இயக்குனர் எஸ்.விஜயகுமாரி கலந்துகொண்டு ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்து உடனடியாக பணிகளை முடிக்கவும், ஊராட்சி பகுதிகளை குப்பையில்லாமல் தூய்மை பகுதியாக வைத்துக் கொள்ளவும், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவும் உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார். கூட்டத்தில் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் லோகன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, லதா, செல்வி, ஒன்றிய பொறியாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊராட்சி செயலாளர்களுடன் ஆய்வு நடத்தினார்.