தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல் 7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு


தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்குதல்  7 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
x

தனியார் பள்ளி வேன் டிரைவர் மீது தாக்கிய 7 பேரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே உள்ள எல்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் தினேஷ் (வயது 22). இவர் கோலியனூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களை வேனில் இருந்து அவரவர் சொந்த ஊரில் இறக்கி விட்டு தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எல்.ஆர்.பாளையம் மெயின்ரோட்டில் செல்லும்போது அங்கு புதுச்சேரி கரைமேட்டை சேர்ந்த சிவப்பிரகாசம், கலிதீர்த்தால்குப்பத்தை சேர்ந்த சபரி ஆகிய இருவரும் வழியை அடைத்துக்கொண்டபடி மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர்.

இதை பார்த்த தினேஷ், ஹாரன் அடித்தபடி ஓரமாக செல்லுமாறு கூறினார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சிவப்பிரகாசம், சபரி, கலிதீர்த்தால்குப்பம் சதீஷ் உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து தினேசை தாக்கினர். இதை தடுக்க வந்த அவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (22), வினோத் (18) மற்றும் தினேசின் தந்தை ராமமூர்த்தி ஆகியோரையும் அவர்கள் 7 பேரும் சேர்ந்து சாதி பெயரை சொல்லி திட்டி இரும்புக்குழாயால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து தினேஷ், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் சிவப்பிரகாசம், சபரி உள்ளிட்ட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story