பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் கலைத்திறன் போட்டிகள்


பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் கலைத்திறன் போட்டிகள்
x

பாவேந்தர் பாரதிதாசன் இலக்கிய பேரவை சார்பில் கலைத்திறன் போட்டிகள் நடந்தன.

பெரம்பலூர்

பெரம்பலூர் பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள், ரெட்டியார் அரங்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இலக்கிய பேரவையின் தலைவர் வேல்.இளங்கோ தலைமை தாங்கினார். செயலாளர் ஓவியர் முகுந்தன் வரவேற்றார். பொருளாளர் புலவர் செம்பியன், இணைச்செயலாளர் பாவலர் சிற்றரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு, 9 மற்றும் 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்பு வரையில் என 3 பிரிவுகளாக மாணவ, மாணவிகளுக்கு பாவேந்தர் கவிதை ஒப்பித்தல், திருக்குறள் ஒப்பித்தல், சமுதாய மறுமலர்ச்சியாளர்கள்- தலைவர்களின் வரலாற்றை விவரிக்கும் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பள்ளி மாணவ-மாணவிகள் சுமார் 150 பேர் கலந்து கொண்டு தங்களது கலைத்திறன்-அறிவுத்திறனை வெளிப்படுத்தினர். போட்டியில் பதியம் சாரங்கபாணி, அகழ்வினோதினி, கவிஞர் தேனரசன், கவியோவியன் ஆகியோர் நடுவர்களாக இருந்து முதல் 3 இடங்களை பிடித்தவர்களை தேர்வு செய்தனர். முடிவில் துணை செயலாளர் சிவானந்தம் நன்றி கூறினார்.


Next Story